கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா
செங்கற்பட்டில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா செங்கற்பட்டு புதிய பேருந்து நிலையம் புது நிருமலா விழா அரங்கில் கவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் சேம்சு தலைமை தாங்கினார். பெருமன்றத்தின் காஞ்சி மாவட்டத் தலைவர் ஓவியக்கவி நா.வீரமணி முன்னிலை வகித்தார். கவிஞர் சீனி.சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். சா.கா.பாரதிராசா எழுதிய ‘சருகின் சத்தம்’ நூலை மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்றப் பேச்சாளருமான கவிஞர்…