கண்ணீர்ப் பொங்கல் – கவிஞர் முடியரசன்

 கண்ணீர்ப் பொங்கல்! துளைக்க வரும் துப்பாக்கிக் குண்டு கண்டும்       துணிந்தெதிர்த்தார் அஞ்சவிலை ஈழ நாட்டார் வளைக்கவரும் படைகண்டும் கலங்க வில்லை       வரிப்புலியாய்ப் பாய்ந்தெதிர்த்து வாகை கொண்டார் அழைத்தபடை அரவணைக்கும் என்று நின்றார்;       அமைதியெனும் பெயராலே குண்டு வீசித் தொலைக்கவரும் நிலைகண்டே மயங்கு கின்றார்;       தோழமையே பகையானால் என்ன செய்வார்? சிங்களத்துக் கொடுங்கோலால் அடிமை யாகிச்       சிக்குண்டு நலிந்துருகிப் பின்நி மிர்ந்து வெங்களத்தில் வரும்விடியல் எனநி னைந்து       வேங்கையெனச் சினந்தெழுந்து போர்தொ டுத்தார் தங்குலத்தோர் விழியிழந்தும் உயிரி ழந்தும்       தையலர்தம் கற்பிழந்தும் தயங்கா ராகித் தங்குறிக்கோள்…

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!  – தங்க. சங்கரபாண்டியன்

கல்விப் பெரு வள்ளல் புதுக்கோட்டை அண்ணல்!      ‘கல்விப் பெருவள்ளல்’, ‘புதுக்கோட்டை அண்ணல்’ என்றெல்லாம் புகழப்படும் பு.அ. சுப்பிரமணியனார், ஐயாக்கண்ணு – மாணிக்கத்தம்மாள் இணையருக்கு ஐப்பசி 07, 1929   – 22.10.1898-ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையார் மறைவினால் கல்லூரியில் படித்து வந்த அண்ணலாரின் படிப்பு பாதியில் தடைபட்டது. அதனால் இவர் கல்விச் செல்வத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கிலும், கல்விச் செல்வம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் எனும் பேரவாவிலும், 1924-ஆம் ஆண்டு ‘கல்வி வளர்ச்சிக் கழகம்‘ ஒன்றைத் தொடங்கினார்.  …

எப்படி வளரும் தமிழ்? 3/3 : கவிஞர் முடியரசன்

(எப்படி வளரும் தமிழ்? 2/3  தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்?  3/3     இம்மட்டோ? பிறநாட்டுத் தலைவர்கள், புரட்சியாளர், சிந்தனையாளர் ஆகியோர்பாற் கொண்ட பற்றாலும் அவர்தம் கொள்கையிற் கொண்ட காதலாலும் இலிங்கன், இலெனின், ஃச்டாலின், காரல்மார்க்சு, சாக்ரடீசு என்றெல்லாம் பெயர் வைத்துக் கொள்கின்றனர். எவ்வெவ் வகையால் ஒதுக்க இயலுமோ அவ்வவ் வகையாலெல்லாம் தமிழை ஒதுக்கிவருகின்றனர். ஆனால், இன்று இளைஞரிடையே அவ்வுணர்வு அஃதாவது மொழியுணர்வு ஓரளவு அரும்பி வருவது ஆறுதல் தருகிறது.   இந்து மதத்தவர் முருகவேள், இளங்கோவன், பிறைநுதற் செல்வி, தென்றல் என்று…

எப்படி வளரும் தமிழ்? 2/3 : கவிஞர் முடியரசன்

(எப்படி வளரும் தமிழ்? 1/3  தொடர்ச்சி) எப்படி வளரும் தமிழ்?  2/3 கல்வித் துறையில்   இயல்பாகவும் எளிமையாகவும் அறிவு வளர்ச்சி பெறத் தாய்மொழி வாயிலாகவே கற்பிப்பதுதான் சிறந்த நெறி என்பதை உணர்ந்த ஒவ்வொரு நாடும் கல்விக் கூடங்களில் அதனதன் தாய்மொழியையே பயன்படுத்தி, அறிவுத் துறையில் முன்னேறி வருவதைக் காண்கிறோம். ஆனால், விடுதலை பெற்ற பின்னரும் தமிழ்நாடுதான் இயல்புக்கு மாறாகச் சென்று, அறிவுத் துறையில் முழுமை பெறாது திண்டாடிக்கொண்டிருக்கிறது. பாலகர் பள்ளிமுதல் பல்கலைக்கழகம்வரை பயிற்று மொழி வேறாக இருக்கிறது. ஆங்கிலம், இந்தி என்ற மொழிகள்தாம்…

எப்படி வளரும் தமிழ்? 1/3 கவிஞர் முடியரசன்

எப்படி வளரும் தமிழ்? 1/3   உலக நாடுகள் பலவும் தத்தம் தாய்மொழி வாயிலாக அறிவியல் முன்னேற்றங் கண்டு தலை நிமிர்ந்து நிற்பதை நாம் காணுகின்றோம். தமிழ் மொழியிலும் அறிவியல் வளர்ச்சி காணத் துடிதுடிக்கும் நல்லுள்ளங் கொண்டோர் சிலரும் ஈங்குளர் என்பதும் அதன் பொருட்டுப் பெருமுயற்சி மேற்கொண்டு உழைத்து வருகின்றனர் என்பதும் நமக்குக் களிப்பூட்டுவன வேயாகும். அப் பெருமக்கள் உரத்த குரல் கொடுக்கும் பொழு தெல்லாம் நம் உள்ளம் பூரிக்கத்தான் செய்கிறது. ஆனால், முரண் பட்ட கொள்கைகள் பரவிய தமிழ்நாட்டில் அக் குரல், காற்றுடன்…

நடைமுறைப் புத்தாண்டில் உறுதி கொள்வீர்!

உறுதி கொள்வீர்! – கவிஞர் முடியரசன் முதலோடு முடிவில்லாப் பெருமை, நான்கு மொழிபெற்றும் மூப்பில்லா இளமைத் தன்மை, அதனோடு மிகுமினிமை, காலஞ் சொல்ல அமையாத பழந்தொன்மை, தனித்தி யங்கி உதவுநிலை, வளர்பண்பும், எளிமை, யாவும் உயர்தனிச்செந் தமிழுக்கே உண்டாம்; மேலும் புதுமைபெற முடிசூடி அரசு தாங்கப் புலவரெலாம் இளைஞரெலாம் உறுதி கொள்வீர்! தெலுங்குமொழி பிறமொழிகள் உயர்தல் காண்பார் தேன்மொழியாம் தமிழ்மொழியை வாழ்க என்றால் கலங்குகின்றார் ஒருசிலர்தாம்; உயிரா போகும்? கலங்கற்க! தமிழ்வாழ்ந்தால் யாரும் வாழ்வர்; புலங்கெட்டுப் போகாதீர்! ஆட்சி செய்யப் புன்மொழிகள் வேண்டாதீர்! தமிழின்…

யார் கவிஞன் ? – கவிஞர் முடியரசன்

  காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன் கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன் தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத் தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன் மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன் ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின் மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவன் மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன் காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்…

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன்

உலகை மாற்றுவோம் – கவியரசர் முடியரசன் உலகம் இங்குப் போகும் போக்கை ஒன்று சேர்ந்து மாற்றுவோம் ஒருவ னுக்கே உரிமை யென்றால் உயர்த்திக் கையைக் காட்டுவோம் கலகம் இல்லை குழப்பம் இல்லை கடமை யாவும் போற்றுவோம் கயமை வீழ உரிமை வாழக் கருதி யுணர்வை ஏற்றுவோம் உழைத்து ழைத்து விளைத்த நெல்லை ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம் உழைத்து விட்டுக் களைத்த பின்னர் உணவில் லாமற் படுக்கிறோம் களைத்துப் போன கார ணத்தைக் கருதிக் கொஞ்சம் நோக்குவோம் கடவுள் ஆணை என்று சொன்னால் கண்ணில் நெருப்பைக்…