இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது! – கவிஞர் வாலி
இருந்தபோது நாடு தொழுதது! இறந்த பின்பு நாடு அழுதது! பொன்மனச்செம்மலே! என் பொழுத்து புலரக் கூவிய சேவலே! உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில்தான் உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது! என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதையாயிற்று! இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னரே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ! என்னை வறுமைக் கடல்மீட்டு வாழ்க்கைக் கரை சேர்த்த படகோட்டியே! கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே! நான் பாடிய பாடல்களை நீ பாடிய…