பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2 தொடர்ச்சி) பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3 அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும் அறுசீர் விருத்தம் குழலி : அணங்கே அல்லி அறியாயோ அரசன் மகளை உணராயோ இணங்கி நாமும் ஏற்றிட்டோம் இளையாள் காவல் பூண்டிட்டோம் சுணக்கம் அதிலே நேர்ந்ததுவோ சூழ்ச்சி முற்றும் அழிந்ததுவோ பிணக்கம் நம்மில் வேண்டாது பிழையைத் தடுத்தல் வேண்டுமன்றோ அல்லி : நமது காவல் …