வாக்குகளுக்கு ஏனோ விலை? – சா.சந்திரசேகர்

வாக்குகளுக்கு ஏனோ விலை? பொழியுது வாக்குறுதி மழை வாக்குகளுக்கு ஏனோ விலை நயமாகப் பேசுவது தான் அரசியல் கலை நல்லோருக்கு வாக்களித்து மற்றோருக்கு வைப்போம் உலை                                           – சா. சந்திரசேகர் கவிதைமணி, தினமணி 17.11.2015

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! – கோ. மன்றவாணன்

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விரலில் கருப்பு மை வைக்கும்போதே தெரியவில்லையா… நம்நாடு நம்மக்களை நம்பவில்லை என்று! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் தரும் அட்சயப் பாத்திரம் ஆவோம் என்பவர்கள்… தேர்தலுக்குப் பிறகு எங்கள் திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானோ தேர்தல் ஆணையம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது கனவு சனநாயகம். மந்திரிகள் மட்டுமே மன்னர்கள் ஆவது நவீன சனநாயகம்! ஊழலில் சிதறிய ஒரு சொட்டே வெள்ளமாய்ப் பாயும் விந்தையைப் பார்க்கலாம் தேர்தல் திருவிழாவில் மட்டுமே! பணம் வாங்கி வாக் களித்த…

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அழகாக முகம் காட்டவே ஆடிக்கொண்டு வருகிறாய் உன் வருகையினாலே உவகை மிகக்கொண்டு அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க அசராது பேசி மகிழ்வார் ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அசத்திடுவார் ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி ஏய்த்துப் பிழைப்பார் எத்தியே மகிழ்ந்திடுவார் ஏதுமறியா ஏழைகளை ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் அயோக்கிய சிகாமணிகள்!  – ஏகாந்தன், புது தில்லி கவிதைமணி,  தினமணி 17.11.2015

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! – ‘இளவல்’ அரிகரன்

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! பொய்களின் ஊர்வலங்கள் அணிவகுக்க, ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா……. அரசியல்வாதிகளின் குழப்பங்களால் அவ்வப்பொது அதற்கு முன்பாகவே வரும் பெருவிழா……. ஒருநாள் மட்டுமே மகுடஞ்சூட்டி ஒற்றைவிரலுக்கு மை பூசி ஆண்டுமுழுமைக்கும் கரிபூசும் அரசியல்வாதிகளின் பொதுவிழா….. கால்பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்குரிமையை லஞ்சப்பொருளாக்கி கைப்பணம் முழுதுமிழக்கும் வாக்காளர்தம் முட்டாள்நாள் விழா…… இலவசங்களில் ஏமாந்து முழக்கங்களில் மயக்குற்று பரவசத்தில் ஆழ்ந்துபோகும் தேசத்திற்கான ஒருவிழா…….. அரங்கேற்றத்திலேயே திருடுபோகும் மேடைகள்….. முதுகுக்குப் பின்புறமே முகத்துதிப் பூச்சூட்டல்கள்….. காதிலே வாக்குறுதிப் பூச்சுற்றி கன்னத்திலே சேற்றுச் சந்தனம்பூசி…. கைகளிலே விலங்குகள் பூட்டி… கால்களுக்குச்…