கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை

மண்ணும் மரபும் – இளைய  தலைமுறையினருக்கு  இனிய  அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   ‘மண்ணின் மணம்’  என்னும் முதற்பகுதியில்  தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில்  தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி  தமிழ்கொலை  புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு  மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.   ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில்  மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…

இணையவெளியில் பாரதியார் விழா – மறைமலை இலக்குவனார்

இணையவெளியில் பாரதியார் விழா திசம்பர் 11: பாட்டுக்கொரு புலவர் பாரதியார் பிறந்தநாள். மழைத் தொல்லையில் வெளியே விழாவுக்குப் போகமுடியவில்லை. வீட்டிலேயே கணினிமுன் அமர்ந்து கொண்டாடுவோம். பாரதியாரைப் பற்ரிய உங்கள் கவிதையை, கட்டுரையை ஒருங்குறி எழுத்தில் வடித்துக் கவிதை விக்கிக்கு அனுப்புங்கள். உங்கள் முகநூல் கணக்கைக் கொண்டு கவிதை விக்கியில் சிக்கலின்றி நுழையலாம் .உடனடியாகத் தரவேற்றம் செய்யலாம். உங்கள் பேச்சைக் கூட எம்பி4 கோப்பில் பத்து மணித்துளிகளுக்கு மிகாமல் அனுப்பலாம். வாருங்கள். உலகப்பெரும் பாவலன் பாரதியின் புகழ் பரப்புவோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்

கண்டீரா ஓர் இறும்பூதை ! : இளையவன் – செயா

மதுரைப் பாவலர் மா.கந்தையா அவர்கள் தமது மாரடைப்பில் நலந்தேறியபின் தமது மக்களுக்க்கு எழுதிய கவிதை மடல் தமிழ் உணர்வும் ஊற்றமும் பெரியாரிய உறைப்பும் மிக்க அப் பாவலர் தமிழ்த்தாய் அருளால் நலமோங்க வாழ வாழ்த்துகிறோம். – முனைவர் மறைமலை இலக்குவனார்     கண்டீரா  ஓர்  இறும்பூதை ! திருப்பாற்   கடலில்   திருஅமுதம்  எடுக்க ஒருபுறம் தேவர்கள் மறுபுறம் அசுரர்கள் மேருமலையை மத்தாக குறும்பாம்பாம் வாசுகியை பெரும்கயிறாகக் கொண்டு  பெருங்கடலைக் கடைந்தனராம் ! கண்டான்வாலி அனைவரையும் கண்ணால் அகலச்செய்து கையால்  கடைந்தான் ;  கடைந்தவரிடம் அமுதம்தந்தானாம்…