மொழியே விழி! – கவினப்பன் தமிழன்
மொழியே விழி! மொழியென்ப மாந்தர்கட் கெல்லாங் கரவா விழியென்று கொள்ளப் படும். மறைக்காத பார்வையைப் போன்றதாயின், அது மாந்த இனத்தவருக்கு மொழியாம் என்க. உடம்பை யியக்கு முயிர்போல மாந்த ருணர்வை யியக்கு மொழி. உயிரானது உடம்பை இயக்குவது போன்று, மொழியானது மாந்தரின் உணர்வை இயக்குவதாகும். உணர்வேத்தி யுள்ளந் துலக்கி யொழுங்கிற் கணைகாத்தே யாற்று மொழி. உணர்வை ஏற்றி, உள்ளத்தைத் துலக்கி, ஒழுங்கிற்குக் காவலாய் அமையும் ஒழுக்கமே மொழி. குழியொக்குங் கொள்ளுநீர் குன்று விளக்கம் மொழியொக்குங்…