நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்
கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங் காடும் செடியும் கடந்துவந்தேன்; எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன். கட்டும் அணையேறிச் சாடி வந்தேன்;-அதன் கண்ணறை தோறும் நுழைந்துவந்தேன்; திட்டத் திடர்களும் சுற்றிவந்தேன்-மடைச் சீப்புகள் மோதித் திறந்துவந்தேன். காயும் நிலத்தழல் ஆற்றிவந்தேன்-அதில் கண்குளி ரப்பயிர் கண்டுவந்தேன்! ஆயும் மலர்ப்பொழில் செய்துவந்தேன்-அங்கென் ஆசை தீரவிளை யாடிவந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல் ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன். ஆயிரம் காலால் நடந்துவந்தேன்-நன்செய் அத்தனையும் சுற்றிப் பார்த்துவந்தேன்; நேயமுறுப்…