தமிழின்பம் தனி இன்பம் 3/3 – முடியரசன்
(தமிழின்பம் தனி இன்பம் 2/3 – முடியரசன் தொடர்ச்சி) தமிழின்பம் தனி இன்பம் 3/3 மாறவர்மன் சுந்தரபாண்டியன் முன்பகை காரணமாகச் சோழ நாட்டின்மீது படையெடுத்துச் சென்றான். பொருது வெற்றியுங் கொண்டான். அவ் வெற்றிச் செருக்கால் ஊரைப் பாழ் படுத்த ஆணையிடுகிறான். படைவீரர் பாழ்ச்செயலில் ஈடுபடு கின்றனர். பெரும் பெரும் மாளிகைகள் தரைமட்டம் ஆக்கப்படு கின்றன. அதனைக் கண்டு, மாறன் வெற்றி வெறிகொண்டு நகைக்கின்றான். ஆனால், ஓரிடத்துக்கு வந்ததும் அவனது வெறி விலகு கிறது. ஆணவச் சிரிப்பு அடங்குகிறது. “அதோ அந்த மண்டபத்தை…
தமிழின்பம் தனி இன்பம் 2/3 – கவியரசர் முடியரசன்
(தமிழின்பம் தனி இன்பம் 1/3 – முடியரசன் தொடர்ச்சி) தமிழின்பம் தனி இன்பம் 2/3 நாலடியாரும் இவ்வின்பத்துக்கு நல்லதொரு சான்று நவில் கின்றது. மேலுலக இன்பம் சிறந்ததா? தமிழின்பம் சிறந்ததா? என்றால் தமிழின்பம்தான் சிறந்தது என்று அறுதியிட்டுக் கூறுகின்றது. உலக மக்களெல்லாம் மேலுலக இன்பந்தான் சிறந்தது என்பரே என்றால், தமிழின்பத்தினும் அது இனியது என்றால் மேலுலக இன்பத்தைப் பின்னர்ப் பார்க்கலாம் என்று விடை தருகிறது நாலடி. குற்றமற்ற நூற்கேள்வி உடையவரும் தம்முடை பகை யில்லாத வரும் கூர்த்த மதியினரும் ஆகிய தமிழ்ச்…