தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? – கவிவாணர் ஐ.உலகநாதன்
தப்படி வைத்தவர் தப்புவதுண்டோ? வஞ்ச மனத்துடன் வந்து புகுந்தவர் வாலை யறுத்திட வாராயோ-வரும் வெஞ்ச மருக்கிது வேளை பொருட்குவை மேலும் குவித்துடன் தாராயோ சேரு மலேசிய சீர்மிகு நாட்டினை சேரு மிடைப்பகை தீராயோ-உனை வாரியணைத்தவள் வாழ்வு சிறந்திட வாரி நிதிக் குவை தாராயோ ஆறு மலைத்தொடர் அன்பு மனத்தொடர் ஆர்ந்த கலைத்தொடர் தாய்நிலமே-உனை வேறு நிலத்தவர் வெல்ல முனைந்திடின் வேட்டி லவர்தலை போய்விழுமே! வீடு விளங்கிட பெற்ற குழந்தையை நாடு விளங்கிடத் தாராயோ-அவர் பீடு விளங்கிடக் கேடு களாந்திடப் பிள்ளையைப் பெற்றவர் வாரீரோ! தங்க…