பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்!
பாவலர் தமிழேந்தி விடைபெற்றார்! அடுத்தடுத்து இப்படியா ? ‘சிந்தனையாளன்‘ இதழைப் பார்த்தவுடன்அதன் இறுதிப்பக்கத்தை ஆவலுடன்தேடுவோர் மிகுதி. இதழ்தோறும் இறுதிப்பக்கத்தில் இடம்பெற்றிருப்பதுபாவலர் தமிழேந்தியின் பாடல். ” நடப்பு அரசியலை வெளிப்படையாகப்பாடுவோர் அருகிவிட்ட தமிழ் இலக்கியச் சூழலில் தமிழேந்தி மட்டுமேஅந்தத் தனித்தன்மையைக் காப்பாற்றிவருகிறார் ” என்று பாவலர் அறிவுமதி வியந்து பேசுவது வழக்கம். ‘சிந்தனையாளன்’ இறுதிப் பக்கக் கவிதையாக இனித் தமிழேந்தி வரமாட்டார்.அரசியல் கவிதை அற்றுப்போகாமல்காப்பாற்றிய பாவலர் தமிழேந்தியின்பயணம் நின்றுவிட்டது. தமிழின விடியலுக்கான எல்லாப் போராட்டங்களிலும் மார்க்சியப் பெரியாரியப்பொதுவுடைமைக் கட்சி சார்பில் எழுச்சிமுழக்கமிடும் போராளித் தமிழேந்திகுரலை இனிக் கேட்க வாய்ப்பில்லை!…