நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைத் தேடும் ஊராட்சிமக்கள்   நாகப்பட்டினம் மாவட்டத்தில் குளத்தைக்காணோம் என முறையீடு கொடுத்துப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.   வடிவேல் ஒரு திரைப்படத்தில் குளத்தைக்காணோம் என்ற முறையீட்டை அளித்துக் காவலர்கள் வந்து குளத்தைத்தேடித் தலையைப் பிய்த்துக்கொள்வார்கள். அது போலத் தெற்குப் பொய்கை நல்லூர் ஊராட்சி மக்கள் குளத்தைக்காணோம் என முதல்வர் பிரிவிற்கும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கும் மனுக்கள் அனுப்பி உள்ளனர்.   அந்த ஊர் பொதுமக்களிடம் பேசியபோது கடந்த மார்கழி 27, திருவள்ளுவர் ஆண்டு 1948 / 10.01.1917இல் தெற்குப் பொய்கை…