இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 17: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 16: தொடர்ச்சி) 17 மாணவர் ஆற்றுப்படை, புதுக்கோட்டையில் வாழும் வள்ளல் பு.அ. சுப்பிரமணியனார் மீது பாடப்பெற்ற கவிதையாகும். பு.அ. சுப்பிரமணியனார் மணிவிழா மலரில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது.29 இக்கவிதை எழுதப்பெற்ற காலம் சனவரித் திங்கள் 1959. நூற்றுத்தொண்ணூறு அடிகளை உடைய அகவல் கவிதை இது. ஆசிரியப்பா இனத்தில் நிலைமண்டில ஆசிரியப்பா வகையைச் சார்ந்து. ஈற்றியலடி நாற்சீர் பெற்றும், ஈற்றடியின் இறுதிச்சீர் ஏகார ஓசையுடனும் முடிந்துள்ளது. ஆற்றொழுக்குப் போல சீரான நடையைக் கொண்டு விளங்குகிறது இம்மாணவர் ஆற்றுப்படை….