தோழர் தியாகு எழுதுகிறார் 90 : காந்தி(யார்?)
(தோழர் தியாகு எழுதுகிறார் 89 தொடர்ச்சி) காந்தி(யார்?) இனிய அன்பர்களே! என் அக்காள் பெயர் காந்திமதி. மற்றபடி எல்லாக் குழந்தைகளுக்கும் மகாத்துமா குறித்து என்ன சொல்லப்படுமோ அதுதான் எனக்கும் சொல்லப்பட்டது. தனியாக காந்திபக்தி அல்லது காந்திப்பற்று என்று எதுவும் எனக்கு எப்போதும் இருந்ததாக நினைவில்லை. அப்பாவுக்கு நண்பர்களாக இருந்த சில பெருந்தனக்காரர்கள் அவர்களின் அலங்கம் போன்ற அரண்மனைகளில் (இது அம்மாவின் வருணனை) பெரிய காந்தி படங்களை மாட்டி வைத்திருந்ததும் கூட காந்தி தொடர்பான என்அசிரத்தைக்குக் காரணமாக இருக்கலாம். நண்பர் அமீர்சானுடன் பழகி அவர் மதித்தவர்களில்…