15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 – ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் காந்தி ஊரகப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 15ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15ஆவது) உலகத் தமிழ் இணைய மாநாடு ஆவணி 24,25&26, 2047 / 2016 செப். 9,10,11 ஆகிய நாள்களில் திண்டுக்கல் காந்தியூர் ஊரக (கிராமிய)ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள து . 2016 மாநாட்டின் முதன்மைத் தலைப்பாகக் “கணிணியெங்கும் தமிழ்! கணிணியெதிலும் தமிழ்!” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்குறிப்பிடும் தலைப்புகளில்…