கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! – மு.இலெனின் சுப்பையா
கானல் நீரும் குடிநீராகலாம்! தேர்தல்முறையால் மக்களாட்சி மலராது! கானல் நீரில், குடிநீர், மின்சாரம், கன்னெய்(பெட்ரோல்), ஏப்புநோய்(எய்ட்சு), புற்றுநோய் போன்ற நோய்களுக்கான மருந்து, பசிப்பிணி போக்கும் மருந்து, அறுவையின்றி அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து, தங்கம், வைரம் ஆகியன பெறலாம் என்ற இந்த அனைத்துக் கற்பனைகளும்கூடச் சாத்தியமாகலாம். ஆனால் தேர்தல் சீர்திருத்தம் செய்யாமல் ஊழலையும், கையூட்டையும் இந்த நாட்டில் இருந்து அறவே ஒழித்து விடலாம் என்பது ஆயிரம் ஆண்டுகளானாலும் இயலாது என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை என்பதே உள்ளங்கை நெல்லிக்கனி. இந்த நாடு விடுதலைபெற்று…