பாசக்கயிறா? வேசக்கயிறா? – இலக்குவனார் திருவள்ளுவன்
பாசக்கயிறா? வேசக்கயிறா? தமிழ்நாட்டில் இறைநம்பிக்கை சார்ந்து காப்புக்கயிறு கட்டும் பழக்கம் உள்ளது. ‘இரட்சா பந்தன்’ என்பதும் பாதுகாப்பு தரும் உறவை உறுதிப்படுத்துவதற்கான காப்புக்கயிறுதான். கீற்றுகளை இணைத்து உருவாக்கப்படுவது பந்தல். முத்துகளை இணைத்து உருவாக்கப்படுவது முத்துப்பந்தல். இவைபோல் உறவுகள் இணைந்த அமைப்பே பந்தம். பாசக்கட்டினைக் குறிக்கும் பந்தம் என்பது தமிழ்ச்சொல்லே. பந்தத்திற்குரியவன் பந்தன் என்றாகியுள்ளது. ‘இரட்சா பந்தன்’ கொண்டாட்டத்திற்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பாரதப்போரில் கிருட்டிணனுக்குக் கையில் அடிபட்டுக் குருதி வடிந்த பொழுது பாஞ்காலி, அவரது கையில் தன்சேலைத்தலைப்பைக் கிழித்துக் கட்டியதாகவும் இதனால்…