வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 36 (2.06) காமம் விலக்கல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 35 (2.05) தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 36. காமம் விலக்கல் 351. காம மகத்தெழு மாமத வெறியே. காமம் உள்ளத்தில் எழுகின்ற மிகப் பெரிய வெறி ஆகும். இன்ப மறிவோ டிருந்ததுநு பவிப்பதே. இன்பம் என்பது சுய நினைவோடு அநுபவிப்பது ஆகும். இராச்சில குறித்தறை யியைந்திட லின்பம். சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அநுபவிப்பது இன்பம் ஆகும். 354.எண்ணிய பொழுதிடத் தியைந்திடல் காமம். நினைத்த பொழுது நினைத்த இடத்தில் அநுபவிப்பது காமம் ஆகும். காம மகப்புறக் கண்களைக் கெடுத்திடும்….