(தோழர் தியாகு எழுதுகிறார் 221 : அவலமான கல்விச் சூழல் 2/2-தொடர்ச்சி) காமராசர் பிறந்த நாள் இனிய அன்பர்களே! இன்று (சூலை 15ஆம் நாள்) இளைஞர் அரண் – கல்வி உரிமை மாநாட்டுக்காகக் குடந்தையில் இருக்கிறேன். ஐயா சுப்பிரமணியம் அவர்களின் வீட்டில் தனியாக உட்கார்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருந்தேன். ஐயாவின் மூத்த மகன் பாபு ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து “ஃகாசா” என்று அறிமுகம் செய்து வைத்தார். “உட்காருங்கள், எனக்குப் பேச நேரமில்லை” என்றேன். ஃகாசா சொன்னார்: “இன்று காமராசர் பிறந்த நாள். நீங்கள்…