தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?
(தோழர் தியாகு எழுதுகிறார் : பரணர் பாடிய பேகனும் சாம்ராசு பாடும் தோழர்களும்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! கைச்சரக்கா மார்க்குசியம்? மார்க்குசுக்கு அடிக்கடித் தேர்வு வைக்கின்றனர். எந்த ஒரு சிக்கலுக்கும் மார்க்குசிய வழியில் தீர்வு காண்பது பற்றிய கேள்வி அடிக்கடி எழுப்பப்படுகிறது. இசுரேல்-பாலத்தீனத்தின் மீத இசுரேல் நடத்தி வரும் இனவழிப்புப் போரைப் மார்க்குசிய வழியில் புரிந்து கொள்வதும் விளக்குவதும் எப்படி? இந்தியாவில் பாசிச பாசகவை எதிர்ப்பதற்கு மார்க்குசியம் வழிகாட்டுமா? குமுகிய நாடுகள் எனப்பட்டவற்றில் ஏற்பட்ட நெருக்கடிகளுக்கும் தோல்விகளுக்கும் மார்க்குசியம் தரும் விளக்கம் என்ன? பொதுமைக் குமுகம்பற்றிய…