காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’: பன்னாட்டுக் கருத்தரங்கு
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில் இரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார். கம்பன் பிறந்த நாளை…
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்
காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் எதிர்வரும் மாசி 22, 2047 / 5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. ‘கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே’ என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். ‘அறவியல் பாடல்களிலே‘ என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று…