இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்
(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 1.2 புலவர் வாழ்த்து தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது. திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன….