தோழர் தியாகு எழுதுகிறார் 11: காலநிலை மாற்றம் கற்பிதமன்று
(தோழர் தியாகு எழுதுகிறார் 10: மா இலெனின் விளக்கமும் பேராசிரியர் நெடுஞ்செழியன் நினைவேந்தல் குறிப்பும் தொடர்ச்சி) காலநிலை மாற்றம் கற்பிதமன்று “மெய்ம்மைகளிலிருந்து உண்மைக்கு” என்பார் மா இலெனின். தரவுகளிலிருந்து முடிவுக்கு என்றும் இதைப் புரிந்து கொள்ளலாம். தரவுகள் இல்லாமல் சில முன்-முடிவுகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசுவதால் பயனில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள் இல்லாமல் இந்தச் சிக்கலான போராட்டத்தை முன்னெடுக்க இயலாது. எகித்து நாட்டில் இப்போது காலநிலை மாற்றம் தொடர்பான உயர்நிலை மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டை ஒட்டி முதன்மையான சில காலநிலைத் தரவுகள் வெளிவந்துள்ளன. நேற்றைய இந்து (ஆங்கிலம்) நாளேட்டில் தரவு அணி…