திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 049. காலம் அறிதல்
(அதிகாரம் 048. வலி அறிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 049. காலம் அறிதல் செய்யத் துணிந்த செயலுக்குப் பொருந்தும் காலத்தை ஆராய்தல் பகல்வெல்லும், கூகையைக் காக்கை; இகல்வெல்லும் வேந்தர்க்கு, வேண்டும் பொழுது. காக்கை, கோட்டானைப் பகல்வெல்லும்; ஆட்சியார்க்கும் காலம் மிகத்தேவை. பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல், திருவினைத், தீராமை ஆர்க்கும் கயிறு. காலத்தோடு பொருந்திய செயற்பாடு, செல்வத்தைப் கட்டிக்காக்கும் கயிறு.. அருவினை என்ப உளவோ….? கருவியான்,…