குறள் கடலில் சில துளிகள் 29. – பெரியாரைப் பேணுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 28 – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 29 . பெரியாரைப் பேணுக அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.   (திருவள்ளுவர்,  திருக்குறள், பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண் ௪௱௪௰௩ – 443) பதவுரை: அரியவற்றுள்-அருமையானவற்றுள், (அருமையான பேறுகளுள்); எல்லாம்-அனைத்தும்; அரிதே-அருமையானதே; பெரியாரை-பெருமையுடையவரை; பேணி-விரும்பி; நலன்பாராட்டி; உவப்பன செய்து; தமர்-தம்மவர்; தமக்கு நெருக்கமான உறவினர், தமக்குச் சிறந்தாராக; கொளல்-கொள்க. பொழிப்புரை : பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம்…

குறள் கடலில் சில துளிகள் 28. – துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க!  – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 27. அறமறிந்த அறிவு உடையவரைத் துணையாகக் கொள்க! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 28. துன்பம் வந்ததை நீக்கி, வருவதிலிருந்து காப்போரைத் துணையாகக் கொள்க! உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல்.   (திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்,  குறள் எண்:௪௱௪௰௨ – 442) பதவுரை: உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நீக்கி-விலக்கி; உறாஅமை-வராத வண்ணம்; முன் – (வரும்)முன்னால்; காக்கும்-காப்பாற்றும்; பெற்றியார்-தன்மையுடையார், இயல்புடையர்; பேணி-நலன்பாராட்டி,; கொளல்-கொள்க. பொழி்ப்புரை: வந்த துன்பம் நீக்கி, வர உள்ள…

குறள் கடலில் சில துளிகள் . 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 26. விருப்பத்தைப் பகைவர் அறியப் புலப்படுத்தாதே! காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல் (திருவள்ளுவர்,  திருக்குறள், அதிகாரம்:குற்றங்கடிதல் குறள் எண்: ௪௱௪௰ – 440) பதவுரை: காதல-காதலித்த பொருள்கள்; விரும்புகின்ற பொருள்கள்; காதல்-விருப்பம்; அறியாமை-தெரியாமல்; உய்க்கிற்பின்-செலுத்த வல்லனாயின். பொழிப்பு: தன்விருப்பம் வெளிவராவாறு அடக்கி வாழ்ந்தால், பகைப்பார் தோற்பார் (பேரா.வெ.அரங்கராசன்). தனக்கு விருப்பமானவற்றைப் பிறர் அறியாதபடி அடக்கி வைத்திருப்பவனிடம் பகைவரின் வஞ்சகச்…

குறள் கடலில் சில துளிகள் . 25. உன்னையே வியந்து கொள்ளாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

( குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 25. உன்னையே வியந்து கொள்ளாதே! வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை.  ( திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்: ௪௱௩௰௯ – 439) பொழிப்பு: எப்பொழுதும் தன்னை வியந்து கொண்டாடாதே; நன்மை தராத செயல்களை மனத்தாலும் விரும்பாது ஒழிக! (சி.இலக்குவனார்) பதவுரை: வியவற்க-வியந்து கொள்ளற்க, பெருமிதம் கொள்ளற்க, புகழ்ந்து கொள்ளற்க; எஞ்ஞான்றும்-எப்பொழுதும்; தன்னை-தன்னை; நயவற்க-விரும்பாதீர்; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்….

குறள் கடலில் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே!- தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 24. கஞ்சத்தனத்தை என்றும் எண்ணாதே! பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன்று அன்று. (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், எண்:௪௱௩௰௮  – 438)  பொழிப்பு: பற்றுள்ளம் கொண்டு செல்வத்தைச் செலவிடாத இவறன்மை எந்த நன்மையுள்ளும் வைத்து எண்ணப்படுதற்குரிய ஒன்று அல்ல. பதவுரை: பற்று-பிடித்தல்; உள்ளம்-நெஞ்சம்; என்னும்-என்கின்ற; இவறன்மை-கஞ்சத்தனம்; இவறல்+தன்மை; செலவிடப்படத் தக்கனவற்றிற்குச் செலவு செய்யாத பொய்யான சிக்கனத் தன்மை. இது திருவள்ளுவரால் புதிதாக ஆளப்பட்ட…

குறள் கடலில் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 22. உன்னைத் திருத்திய பின் ஊரைத் திருத்து! – தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 23. நல்லன செய்யாது செல்வத்தை அழிக்காதே! செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: குற்றங்கடிதல், குறள் எண்:  ௪௱௩௰௭ – 437) நல்ல செயல்களுக்குப் பயன்படுத்தாதவன் செல்வம் பயனின்றி அழியும் என்கிறார் திருவள்ளுவர். பதவுரை: செயல்பால-செய்யவேண்டியவை; செய்யாது-செய்யாமல்; இவறியான்-(மிகையான பொருட்) பற்றுக்கொண்டு அதைச் செலவழிக்காதவன், கருமி; செல்வம்-பொருள்; உயல்பாலது-மீட்கத்தக்கது, உய்யுந்தன்மை, தப்புதலுக்குரியது, உளதாகுதல், ஒழிக்கத்…

குறள் கடலில் சில துளிகள் 7 . பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக்கொள்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

(குறள் கடலில் சில துளிகள் 6. வாய்ச்சுவைக்கு முதன்மை தருவோர் வாழ்ந்தால் என்ன? ….தொடர்ச்சி) குறட் கடலிற் சில துளிகள் 7. பகைவராலும் அழிக்க முடியாத அறிவைத் துணைக் கொள்க! அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்கல் ஆகா அரண்  (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்: அறிவுடைமை, குறள் எண்: 421) அறிவு அழிவு வராமல் காக்கும் கருவி. அதுவே பகைவராலும் அழிக்கமுடியாத அரணுமாம் என்கிறார் திருவள்ளுவர். அறிவு யாரிடம் இருக்கின்றதோ அதுவே அவர்களைக் காக்கும் கருவி என மேனாட்டுக் கல்வி அறிவியலாளர்கள் கூறுகின்றனர். கல்வி…

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 15 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் திருவள்ளுவர், உலகப் பொதுநூலான திருக்குறளில் அறிவியல் பார்வையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆங்காங்கே அறிவியல் குறிப்புகளையும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அறிவியல் கலைச்சொற்களையும் கையாண்டுள்ளார். அவற்றில் சிலவற்றை நாம் பார்த்து வருகிறோம்   15 அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற்கு இயல்பு (திருவள்ளுவர், திருக்குறள், அதிகாரம்:இறைமாட்சி, குறள் எண்: 382)   அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவின்றி ஆள்வோரிடம் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நாட்டில் இயற்கைப் பேரிடர், உட்பகையால் எதிர்ப்பு, அயல்நாட்டுப்பகையால் எதிர்ப்பு முதலான நேர்வுகளில்…

திருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! – தமிழரசி

திருவள்ளுவரா வைத்தார்? ஒரு பெயரில் ஈர் அதிகாரம்!   திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் புகழப்பட்ட திருக்குறளில் ஒரே பெயரில் ஈர் அதிகாரம் எப்படி வந்தது? அதுவும் “குறிப்பு அறிதல்” என்னும் பெயரில் இருப்பது இன்னும் வியப்பைத் தருகிறது. எளியோரான…