இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 33 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் ஒரு மொழியின் பழமையை அம் மொழியின் சொற்களே அறிவிக்கும். தமிழ் மொழியின் பழமையைத் தமிழ்ச்சொற்களே அறிவிக்கின்றன. சொற்கள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் இடம்பெற்று நிலைத்திருக்குமேல் அவை தம் பழமையை அறிவிக்க வல்லன. தமிழ்மொழிச் சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் வெளிநாட்டார் வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. அங்ஙனம் இடம்பெற்று நிலைத்துள்ள சொற்கள் தமிழின் பழமையை உணர்த்த வல்லனவாய் உள்ளன. அறிஞர் காலுடுவல் அவர்கள் இத் துறையில் ஆராய்ந்து பல தமிழ்ச்சொற்கள் மேலை நாட்டு…