(தோழர்தியாகுஎழுதுகிறார் 206 : வேண்டும்சித்திரவதைத்தடுப்புச்சட்டம் 2/2-தொடர்ச்சி) தமிழ் மணக்கும் காலுடுவெல் இல்லம்  அயல்நாட்டுப் பயணங்களில் வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கப் பெரிதும் விருப்பப்படுவேன். உள்நாட்டிலும் பார்க்க வேண்டியவை பலவும் இருப்பதைக் கால்ந்தாழ்ந்துதான் உணர்ந்தேன். ஆனால் அயல்நாடோ உள்நாடோ அதற்காக யாரையும் தொல்லைப்படுத்தக் கூடாது என்று கவனமாக இருப்பேன். நமக்குள்ள ஆர்வத்தில் கொஞ்சமாவது அவர்களுக்கும் இருக்க வேண்டும். இன்றேல் ஒன்றும் செய்ய முடியாது. அமெரிக்கப் பயணத்தில் நான் சென்று பார்த்தவைபற்றி ஒரு நூலே எழுதலாம், அவ்வளவு செய்திகள் உண்டு. சிக்காகோவில் மே நாள் நினைவுச் சின்னத்தைத்…