செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர்! – வைகை அனீசு
செயமங்கலம் பகுதியில் கரைஉடைந்து வீணாகும் தண்ணீர் தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலத்தில் கண்மாய் கரை உடைந்து குளத்திற்குச் செல்லும் தண்ணீர் வீணாகிறது. செயமங்கலம் அருகே உள்ள கண்மாய்க்கு வாய்க்கால் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்பொழுது பெய்த கனமழையால் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வயல்களுக்குச் சென்றது. வயல்களில் ஏற்கெனவே நெல்களை நடுவதற்கு உழவர்கள் நெற்பயிரைப் பயிரிட்டிருந்தனர். இந்நிலையில் கரை உடைந்ததால் நெற்பயிர்களுக்குள் தண்ணீர் உள்ளே சென்று அனைத்தும் வீணாயின. அதே போல கண்மாயில் மீன்குஞ்சுகளை வளர்த்து வந்தனர். இதனால் குளத்திலிருந்து…