என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 06. நெஞ்சே தொடர்ந்து வருக!
(என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 05. நெஞ்சே எழு! – தொடர்ச்சி) என் தமிழ்ப்பணி நெஞ்சே தொடர்ந்து வருக! ஆங்கு வீசும் தென்றற்காற்று மலர் பறிக்க வல்லானொருவன், மலரைப் பறிக்கத் தன் கைக் கோலால் கிளைகளை அலைக்கழித்தல்போல், மராமரத்துக் கிளைகளை, அலைக்கழித்து, அம்மலர்களை வழிச் செல்லும் மக்களின் தலை முடியில் சென்று உதிருமாறு செய்யும். நெஞ்சே! காற்றின் செயல் கொடுமை வாய்ந்ததாகத் தோன்றினும் அக்காற்று இல்லையேல் அம்மலர்கள் மலர்ந்தும் பயனிழந்து போயிருக்கும். அக்காற்று வீசியதால் அதன் மணம் காற்றில் பரவிப் பயன் பெற்றது….