(தோழர் தியாகு எழுதுகிறார் 179 : தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும்- தொடர்ச்சி) வேலிக்கு வேலி! இனிய அன்பர்களே! போலீசு (POLICE) என்பதைத் தமிழில் காவல்துறை என்று மொழிபெயர்க்கிறோம். காவல்துறையின் பணி “மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலை உறுதிசெய்தல், குற்றத் தடுப்பு, குற்றத் தீர்வு” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. POLICE என்ற சொல்லைச் சிலநேரம் வினைச் சொல்லாகவும் பயன்படுத்துவதுண்டு. அப்போது அதன் பொருளைச் சுருக்கி ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமானால் ‘கண்காணித்தல்’ என்று வரும். யாரும் சட்டத்தை மீறாமல், குற்றம் செய்யாமல் கண்காணித்தல், குற்றம் நடந்து விட்டால்…