செந்தமிழ்த் தாயே!- கவிஞர் முடியரசன்
செந்தமிழ்த் தாயே! எடுப்பு எங்கள் தமிழ் மொழியே! – உயிரே! -எங்கள் தொடுப்பு இங்குனை நாங்கள் இகழ்ந்தத னாலேஇழிநிலை அடைந்தோம் உரிமையும் இழந்தோம் -எங்கள் முடிப்பு பூமியில் மானிடர் தோன்றிய நாளேபூத்தனை தாமரைப் பூவினைப் போலேபாமிகும் காவியப் பாவையே தாயேபணிந்தோம் கடைக்கண் பார்த்தருள் வாயே. -எங்கள் இயலிசை கூத்தென இலங்கிடு வாயேஎமதுயிர் உணர்வுகள் யாவையும் நீயேமயலெமை நீங்கிட மதியருள் வாயேமைந்தரைக் காத்தருள் செந்தமிழ்த் தாயே. -எங்கள் – கவிஞர் முடியரசன்