காவிரித் தாய் காப்பு முற்றுகை இடம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வல்லம் சாலை) காலம் : தி.பி.2048 பங்குனி-15,  28.03.2017 செவ்வாய் காலை 10 மணி முதல் தமிழ்நாடு அரசே செயல்படு; இந்திய அரசைச் செயல்பட வை!   இந்திய அரசே! காவிரித்தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை நீக்காதே! காவரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்திற்குக் காவிரி வழக்கை அனுப்பாதே! விளைநிலங்களில் எங்கேயும் எரிநெய்மம்(பெட்ரோலியம்), எரிவளி, நிலக்கரி எதுவும் எடுக்காதே! தமிழ்நாடு அரசே! மேற்கண்டகோரிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்து; அரசியல் அழுத்தம் கொடு! காவிரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவித்திடு! ஆறுகளைக்காலி செய்யும் மணல் விற்பனையை முற்றாக நிறுத்து! கட்டுமானப் பணிகளுக்கான மணல் எடுப்பது குறித்து, பரிந்துரை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திடு! உச்சவரம்பின்றி அனைத்து உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்!     தண்ணீரின்றிப் பயிர்அழிந்த நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ. 25,000  உதவித்தொகை  வழங்கு!  இதில் 5 காணிக்கு(ஏக்கருக்கு) மட்டும் என்ற வரம்பை நீக்கு!      தண்ணீரின்றிப் பயிர் செய்யாமல் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ.15,000 உதவித்தொகை வழங்கு! உழவுத்தொழிலாளர்குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 துயர் துடைப்பு நிதி வழங்கு! தண்ணீரின்றிப் பயிர் அழிந்ததைக் கண்டு பதைத்து நஞ்சருந்தியும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்த உழவர் குடும்பத்திற்கு உரூ.15,00,000இழப்பீடு வழங்கு! காவிரித் தாய் காப்பு முற்றுகை மேற்கண்ட கோரிக்கைகளுக்காகக், கட்சி சார்பின்றிக் காவிரி உரிமை மீட்புக் குழு, 28.03.2017 முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தொடர் முற்றுகைப்    போராட்டம் நடத்துகிறது. அனைவரும் வாருங்கள்! செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு இணையம்:www.kaveriurimai.com பேசி: 94432 74002, 76670 77075