பேராசிரியர் இலக்குவனார்! இலக்குவனார் எனும்பெயரைச் சொல்லும் போதே இனஉணர்வும் மொழிஉணர்வும் எழுமே நெஞ்சில்! தலைமுறையில் தமிழுக்கும் தமிழ ருக்கும் தம்வாழ்நாள் முழுமைக்கும் தொண்டு செய்தார்! சிலரைப்போல் ஒருபோதும் தமிழைச் சொல்லி சில்லறைகள் இவர்சேர்த்த தில்லை! ஆனால் மலையெனவே எதிர்ப்புகளுக் கஞ்சி டாமல் மாத்தமிழைக் காத்திடவே சிறைக்கும் சென்றார்! மொழிப்போரில் களம்கண்டோர் தம்மில் அந்நாள் முன்வரிசைப் படையினிலே இவரி ருந்தார்! “அழித்தொழிக்க வந்தஇந்தி தமிழின் மீது ஆதிக்கம் செலுத்திடுமா தமிழர் நாட்டில்? விழித்தெழுவீர் மாணவர்காள்!”- என்றே சொல்லி வேங்கையென முழக்கமிட்ட மறவர்! மானம் இழப்பதற்கோ? காப்பதற்கோ?…