கா. சுப்பிரமணியப் பிள்ளை  பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை எம்.ஏ. எம்.எல். அவர்களைத் தமிழ் உலகம் நன்கறியும். தமிழறிஞர்கள் பலரும் இவரைத் தமிழ்க் காசு என்று கூறுவதுண்டு.   அவர் முதன்முதல் எம்.எல். பட்டம் பெற்றதால், திருநெல்வேலிச் சீமையில் உள்ளவர்கள் அவரை  ‘எம்.எல். பிள்ளை’ என்றே கூறுவர். தமிழில் ஆழ்ந்த புலமையும் அழுத்தமான சைவப் பற்றும் உடையவர். இதனால் சென்னைப் பகுதியில் உள்ளவர்கள் அவரைத் ‘தமிழச் சைவர்‘ எனக் குறிப்பிடுவர்.   அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராயிருந்து புலவர் பெருமக்கள் பலரை  உண்டாக்கித் தமிழகத்திற்கு…