மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 76
(குறிஞ்சி மலர் 75 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம் 27 தொடர்ச்சி மாந்தர்பால் பொருள் போக்கிப் பயின்றதாம்மடமைக் கல்வியில் மண்ணும் பயனிலைஎந்தமார்க்கமுந் தோற்றில தென்செய்கேன்?ஏன் பிறந்தனன் இத்துயர் நாட்டிலே? — பாரதி அடுத்த நாள் விடியற்காலையில் மீனாட்சிசுந்தரத்தோடு அரவிந்தனும், முருகானந்தமும் மதுரைக்குத் திரும்பி விட்டார்கள். சிற்றப்பாவின் பதினாறாவது நாள் இறுதிச் சடங்குகளுக்காகக் கிராமத்துக்குத் திரும்பவும் போவதற்கு முன்னால் அரவிந்தன் மதுரையில் செய்ய வேண்டிய செயல்கள் சில இருந்தன. மாவட்ட அதிகாரி அலுவலகத்துக்குச் சென்று பூரணியின் வெளிநாட்டுப் பயண அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கொடுத்து ஏற்பாடு செய்தான். பார்க்க வேண்டியவர்களைப்…