அமைச்சரவையில் உதயநிதியின் எழுச்சி மிகு உதயம்! குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் (திருவள்ளுவர், திருக்குறள் 1023) சட்ட மன்ற உறுப்பினரான மு.க.தா.உதயநிதி, கார்த்திகை 28,2053/14.12.2022 அன்று அமைச்சரானார். உதயம் என்பது, எழுதல், மேலெழும்புதல், தோன்றுதல், பிறத்தல் முதலிய பொருள்களையுடைய தமிழ்ச்சொல்லே. கீழ்த்திசையிலிருந்து மேலெழும்பும் சூரியனை உதய சூரியன் என்பதும் தமிழே! உதயநிதியும் அமைச்சரவையில் உதித்துள்ளார். அவரது கட்சியினரில் அவர் ஆதரவாளர்கள் விரும்பியவாறும் பல தரப்பாரும் விரும்பியோ விரும்பாமலோ எதிர்பார்த்தவாறும் ஊடகங்களில் உலா வந்த செய்திகளின்படியும்  தமிழக அமைச்சர்களுள் ஒருவராகப் பொறுப்பேற்றுக்…