கொலையாளியை அடையாளம் காட்டிய கிளி
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா பல்கேசுவர் பகுதியில் வசிப்பவர் விசய்(சர்மா). உள்ளூர் இந்தி நாளிதழின் ஆசிரியராக உள்ளார். கடந்த 23- அன்று விசய் திருமண விழா ஒன்றிற்குச் சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த பொழுது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி நீலம்(சர்மா)(45) மருமமான முறையில் கொல்லப்பட்டிருந்ததை அறிந்தார். கொலையாளி, இது குறித்த எந்தவிதமான தடயங்களையும் விட்டுச் செல்லாமல் தந்திரமாக நடந்து கொண்டுள்ளான். இதனால், தொடர்புடைய சத்தா காவல்நிலையத்தினர் துப்பு துலக் கமுடியாமல், திணறி வந்தனர். இந்நிலையில் நீலம்(சர்மா) வளர்த்து வந்த கிளி கொலையாளியைக்…
நாய்க்கும் கிளிக்கும் தோழமை
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஒலிமடா பகுதியில் கணபதி என்பவர் வசிக்கிறார். இவர் பப்பி என்னும் நாயையும் ரோசி என்னும் கிளியையும் வளர்த்து வருகிறார். நாய் கம்பித்தடுப்பு உடைய கூண்டுபோன்ற பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் பப்பி/நாய் இருந்த கூண்டிற்கு ரோசி/கிளி சென்றுள்ளது. உடனே பப்பி/நாய் வெறியுடன் ந்த பப்பி, ரோசி/கிளியைக் கடிக்க முயன்றது. விர்ரென்று பறந்து ரோசி உயிர் தப்பியது. மீண்டும் ஒரு முறை பப்பி கூண்டிற்கு ரோசி சென்றது. ஆனால், இந்தமுறை அமைதியாக இருந்தது. இதையடுத்து, நாட்கள் செல்ல..செல்ல….