வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா
வந்தவாசி கிளை நூலகத்தில் முப்பெரு விழா வந்தவாசி. நவ.29. வந்தவாசி அரசுக்கிளை நூலகத்தில் நூலக வாசகர் வட்டம், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம், எசு.ஆர்.எம். இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையமும் இணைந்து நடத்திய முப்பெரு விழா நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். நூலகர் க.மோகன் அனைவரையும் வரவேற்றார். இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவர் அ.மு.உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக…
வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – மு.முருகேசு
வகுப்பறையில் தொடங்கும் நல்ல மாற்றங்களே மன்பதையையும் மாற்றும் ஆற்றல் படைத்தது! – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி.நவ.05. வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டம், எசு.ஆர்.எம்.இன்போடெக்கு கணிணிப் பயிற்சி மையம் ஆகியன இணைந்து நடத்திய கல்வி நூல் வெளியீட்டு விழா, நூலகத்திற்கான அதிக உறுப்பினர்களைச் சேர்த்த ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா, நூலகத்திற்கான தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரு விழாவில், வகுப்பறைச் சூழலில் குழந்தைகளின் மனநிலையில் ஆசிரியர்கள் உண்டாக்கும் நல்ல மாற்றங்களே நாளைய சமூகத்தையும் மாற்றும் ஆற்றல படைத்தது என்று…
தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது – கவிஞர் முருகேசு
உழைக்கும் மக்களின் நாவில் இருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது. – உலகத் தாய்மொழி நாள் விழாவில் கவிஞர் முருகேசு உரை வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக மாசி 08, 2047 / பிப்.20, 2016 அன்று நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில், “உழைக்கும் மக்களின் நாவில் உயிர்த்திருக்கும் தமிழ்மொழி என்றைக்கும் அழிந்துவிடாது” என்று நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு உரையாற்றினார். இவ்விழாவில் பங்கேற்ற அனைவரையும் நூலக வாசகர் வட்டச் செயலாளரும்,…