இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 11 : பெண்ணை நாட்டுப் பெருவீரர்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 10 : உக்கிர பாண்டியன் – தொடர்ச்சி) தமிழர் வீரம்அத்தியாயம் 8பெண்ணை நாட்டுப் பெருவீரர் மலையமான் நாடுதமிழ் நாட்டில் பெண்ணையாறு பாயும் நன்னாடு முன்னாளில் வண்மைக்கும் திண்மைக்கும் உறைவிடமாக விளங்கிற்று; அந் நாட்டின் ஒரு பாகத்தை நெடுங்காலம் மலையமான் என்னும் பட்டப் பெயருடைய சிற்றரசர் ஆண்டு வந்தனர். அதனால் அது மலையமான் நாடு என்றும், மலாடு என்றும் பெயர் பெற்றது. பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள திருக்கோவலூர் அதன் தலைநகரம்1. வலிமை சான்ற முள்ளூர்க் கானம் அதன் கோட்டை. காரியும்…