இனமானப் புலி எங்கே? – காசி ஆனந்தன்
இனமானப் புலி எங்கே? இன்றிருந்த பகல்தனிலே ஞாயிறில்லை! இரவினிலும் நிலவில்லை! விண்மீன் இல்லை! இன்றெரிந்த விளக்கினிலே வெளிச்சம் இல்லை! எண்டிசையும் செடிகொடியில் பூக்கள் இல்லை! இன்றிதழ்கள் ஒன்றிலுமே முறுவல் இல்லை! இன்றெமது நாட்டினிலே பெரியார் இல்லை! எவர்தருவார் ஆறுதல்? இங் கெவரும் இல்லை! கோல்தரித்து நேற்றுலகைத் தமிழன் ஆண்டான்! கொற்றவனை அவனை இழி வாக்கி மார்பில் நூல்தரித்து மேய்ப்போராய் நுழைந்த கூட்டம் நூறு கதை உருவாக்கி “பிரம்ம தேவன் கால்தரித்த கருவினிலே தமிழன் வந்தான் காணீர் என்றுரைத்தமொழி கேட்டுக் கண்ணீர் வேல்தரித்து நெஞ்சில்…
கிழக்குத் தமிழீழத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் அரிய கிணறு கண்டுபிடிப்பு.
வந்தாறுமூலை பிள்ளையார் கோவிலில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட கிணறு, நாகக்கல் கண்டுபிடிப்பு மட்டக்களப்பு, வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு 2 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நாகரசர்களின் கட்டுமானத்தில் உருவான கிணறு, நாகக்கல் ஆகியன கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுதுறைப் பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக வேந்தருமாகிய சி.பத்மநாதன், தொல்லியல் ஆய்வுக்குழுவினர் ஆகியோர் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயக் காணியினுள் மேற்கொண்ட மேலாய்வுகள் மூலம் கருங்கல் தூண்களினால் அமைக்கப்பட்ட கிணறு, கருங்கல்லில் செதுக்கப்பட்ட நாகக் கல் என்பன கண்டுபிடிக்கபட்டன. இதுபற்றிப் பேராசிரியர் சி.பத்மநாதன்…