ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 24 : கிழ வயது
(ப. சம்பந்த(முதலியா)ரின் ‘என் சுயசரிதை’ 23 : மது விலக்குப் பரப்புரை – தொடர்ச்சி) என் சுயசரிதை 21. கிழ வயது இந்துக்களாகிய நம்முள் ஒருவனுக்கு சட்டிபூர்த்தி ஆனவுடன் அதாவது 60 ஆண்டு முடிந்தவுடன் கிழவன் என எண்ணப்படுகிறான். பைபிள் என்னும் கிறித்தவ சிறந்த மத நூலில் ஒருவனுக்குக் கிழ வயது. 70 ஆண்டில் ஆரம்பிக்கிறது என்று குறிக்கப்பட்டிருக்கிறது. என் வரைக்கும் என்னுடைய 75-வது ஆண்டில்தான் நான் கிழவனாக என்னை மதிக்கலானேன். அதற்கு முக்கிய காரணம் அதுவரையில் என் கண்பார்வை நன்றாய் இருந்தது கொஞ்சம்…