அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் – 24-26
(அறிவுக் கதைகள் நூறு 21-23 தொடர்ச்சி) அறிவுக் கதைகள் நூறு 24. பேராசிரியர் தேடிய மனிதன் மேலைநாட்டுப் பேராசிரியர் ஒருவர், பட்டப் பகலில் 12 மணி உச்சி வேளையில், கையில் மெழுகுவர்த்தியை ஏற்றிக்கொண்டு நடைபாதையில் போவோர் வருவோரை அன்புடன் அழைத்து வாருங்கள் என்று கூறி, அவர்கள் முகத்திற்கு நேரே விளக்கைக் காட்டி நன்றாக அவர்களைப் பார்த்துவிட்டு, பிறகு அவரைப் போகச் சொல்லிக் கொண்டேயிருந்தார். அவர்களில் ஒருவன் வியப்படைந்து, “ஏன் ஐயா பட்டப்பகலிலே மெழுகுவர்த்தி விளக்கு ஏற்றிக்கொண்டு ஒவ்வொருவர் முகத்திலும் காட்டி அனுப்புகிறீர்களே, என்ன காரணம்?”…
மறைமலையடிகள் 4/5 – கி.ஆ.பெ.
(மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 4/5 45 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இராயப்பேட்டை பாலசுப்பிரமணிய பக்த சன சபையில் மறைமலையடிகளார் பேசுகின்றபொழுது “கடவுள் நம்பிக்கை வர வரக் குறைந்து வருகிறது. கடவுள் இல்லை என்பவரும் உயிரோடுதான் இருந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிதம்பரம் என். தண்டபாணி(ப் பிள்ளை)யும், ச.ச.(J.S.) கண்ணப்பரும் “பெரியாரைக் கொலை செய்யச் சொல்லி மறைமலையடிகள் மக்களைத் தூண்டுகிறார்” என நீதிமன்றத்தில் ஒரு வழக்கைப் போட்டுவிட்டார்கள். நான் அதுசமயம்…
மறைமலையடிகள் 3/5 – கி.ஆ.பெ.
(மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 3/5 குறித்த நாளில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக் கால் மண்டபத்தில் சைவ சித்தாந்த சபையின் ஆண்டு விழா தொடங்குகின்ற நேரம். எல்லோரும் வந்துவிட்டார்கள். 9.15 ஆகியும் தலைவர் வரவில்லை. கூட்டத்தில் ஒரு பெரிய சலசலப்பு. எல்லோர் கையிலும் துண்டு அறிக்கைகள். அதில் ‘மறைமலையடிகள் ஒரு சைவரா?’ என்ற தலைப்பில் சில கேள்விகள் அச்சிடப் பெற்றிருந்தன. இது வந்திருந்தோர் உள்ளத்தில் ஒரு குழப்பத்தையும், தலைவர் உள்ளத்தில் ஒரு வருத்தத்தையும் உண்டாக்கிவிட்டது. தலைவர் வராமைக்குக் காரணம் அது…
மறைமலையடிகள் 2/5 – கி.ஆ.பெ.
(மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ . : தொடர்ச்சி) மறைமலையடிகள் 2/5 அவரது நூல்களிற் பல தமிழ்ப்பற்றையும் சமயப் பற்றையும் வளர்க்கக் கூடியவை. சில ஆராய்ச்சி அறிவை வளர்க்கக் கூடியவை. அவரது ஆழ்ந்த, அகன்ற நுண்ணறிவைப் பல நூல்களிலும் கண்டு மகிழலாம். அவற்றுள் சில அவரது அச்சகத்திலேயே அச்சிடப் பெற்றவை. சிலரது நூல்களிற் காணப்படுவதுபோன்ற அச்சுப்பிழைகள் எதையும் அவரது நூல்களிற் காணமுடியாது. அவர் தலைமை வகிக்காத, சொற்பொழிவு நிகழ்த்தாத, தமிழ்க் கழகங்களோ, சைவ சபைகளோ தமிழகத்தில் ஒன்றுகூட இல்லை. 1914-இல் வடநாடுகளுக்கும், 1915-இல்…
மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ.
மறைமலையடிகள் 1/5 – கி.ஆ.பெ. மறைமலையடிகள் சுவாமி வேதாசலம் என்கிற பல்லாவரம் உயர்திரு மறைமலையடிகள் தமிழ்த்தாயின் தவமகன். பிறப்பு : 1876இல் பிறந்த நாள் : சூலை 15 பிறந்த ஊர் : காடம்பாடி வட்டம் : நாகப்பட்டினம் தந்தையார் பெயர் : சொக்கநாதப்பிள்ளை இளமைப் பெயர் : வேதாசலம் படித்த கல்லூரி : நாகை வெசுலி மிசன் சைவ ஆசிரியர் : சோமசுந்தர(நாயக்க)ர் பொதுத் தொண்டு : 16ஆம் ஆண்டில் முதல் தோற்றம் : இந்து மதாபிமான சங்கம் திருமணம் : 17ஆம் ஆண்டில்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙா) பேரா. இலக்குவனார் புதுக்கோட்டையில் இருந்த பொழுது ‘குறள்நெறி’ என்னும் இதழை நடத்தினார் அல்லவா? இங்கு அதே பெயரில் தமிழ்த்திங்களிருமுறை இதழைத் தொடங்கினார். இது குறித்து, இக்காலத்தில் பத்திரிகை நடத்தி வெற்றி பெறுவது கலிங்கப் போரில் ஈடுபட்டு வெற்றி காண்பதை ஒத்ததாகும். இத்தகைய துயரை அறிந்தும்கூட திரு இலக்குவனார் தமிழின்மீதுள்ள பற்றினால் குறள்நெறியை வெளியிடும் பணியில் இறங்கியுள்ளார்கள் என்றார் முத்தமிழ்க்காலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள்(பக்கம் 4: குறள்நெறி : 1.2.64) இவ்விதழ் தொடங்குவதற்கான…
தமிழகப்புலவர் குழுவின் முப்பெரு விழா
தமிழகப்புலவர் குழுவின் 109 ஆம் கூட்டம் தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா முத்தமிழ்க்காவலரின் 119ஆம் ஆண்டுவிழா தை 15, 2048 சனிக்கிழமை சனவரி 28, 2017 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை பாரத்து பல்கலைக்கழகம், பாலாசி மருத்துவமனை வளாகம், குரோம்பேட்டை, சென்னை கருத்தரங்கம் : செம்மொழி வளர்த்த செம்மல்கள்
சிறந்தது தாய்ச்செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்
சிறந்தது தாய்ச்செல்வம் செல்வம் பலவகைப்படும். “பதினாறும்’பெற்றுப் பெருவாழ்வு வாழ வேண்டும்” என்று வாழ்த்துவதில் ‘பதினாறு பிள்ளைகள்’ என்று பொருளல்ல. அது மனை, மக்கள், தாய், நெல், நீர், நிலம், கால்நடை, கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், வலிமை, பொன், பொருள், போகம் என்பனவையாகும். இந்தப் பதினாறிலும் சிறந்தது தாய்ச்செல்வம். பிற செல்வங்களை இழந்து விடுவோமானால் முயன்றால் அவற்றைத் திரும்பப் பெற்று விடலாம். தாய்ச் செல்வத்தை இழந்து விட்டால் அதனை எவராலும் எவ்விதத்திலும் பெற முடியாது. – முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்: ஐந்து செல்வங்கள்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் – அறிவிப்பு தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ங] 1.முன்னுரை – முற்பகுதி நாட்டு விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் புரட்சி நடத்திய போராளிகளை உலகம் அன்று முதல் இன்று வரை கண்டு வருகிறது. ஆயுதம் ஏந்தாமல் மக்கள் உள்ளங்களில் தம் எண்ணங்களை விதைத்துப் புரட்சி ஏற்படுத்தும் போராளிகளையும் உலகம் சந்தித்து வருகிறது. ஏட்டில் எழுத்தாலும், நாட்டில் உரையாலும் செயலாலும் களத்தில் நின்றும், மக்கள் நலனுக்காகப் போராடிய சிந்தனையாளர்கள் சிலரே உள்ளனர். அத்தகையோருள் எண்ணத்தக்க ஒருவரே தமிழ்ப்போராளிப் பேராசிரியர் சி.இலக்குவனார்….
கி.ஆ.பெ.விசுவநாதம் வெளியிட்ட ‘தமிழர்நாடு’ – நூல் வெளியீடு
காவியா பதிப்பகம் தமிழ்க்கலை இலக்கியப் பேரவை தொகுப்பும் பகுப்பும் : பேரா.கோ.வீரமணி ஐப்பசி 21, 2046 / நவ.07, 2015 மாலை 05.00 சென்னை நூல் விலை உரூபா 1300/- அரங்கத்தில் உரூபா 800/ மட்டுமே
அறிவுச் செல்வம் – கி.ஆ.பெ.விசுவநாதம்
செல்வம் பலவகை, அதில் அறிவு ஒரு வகை எனக் கூறலாம். இதனால் அறிவும் ஒரு செல்வம் என்றாகிறது. இதைவிட ‘‘அறிவே செல்வம்’’ என்பதுதான் பொருத்தமானதாக இருக்கும். எச்செல்வமும் இல்லாத ஒருவரிடம் அறிவுச் செல்வம் ஒன்றிருந்து விட்டால் அவன் எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவான். எல்லாச் செல்வங்களையும் பெற்ற ஒருவன் அறிவுச் செல்வத்தைப் பெறாதவனாக இருந்தால் அவன் எல்லா செல்வங்களையும் இழந்தவனாகிவிடுவான். எந்தச் செல்வத்தையும் உண்டு பண்ணும் ஆற்றல் அறிவுச் செல்வத்திற்கு உண்டு. பிற செல்வங்களுக்கு இந்த ஆற்றல் இல்லை. இதனாலேயே வள்ளுவர்…
பேரிழப்பு – முத்தமிழ்க் கவிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்
கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய இழப்பு, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழகத்திற்கும் நேர்ந்த ஒரு பேரிழப்பு. அதுவும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அடுத்தடுத்து நல்லறிஞர்கள் பலரை தமிழகம் இழந்து வருவது பெரிதும் வருந்தத்தக்க ஒன்று. பாரதிதாசன் அவர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞன். அவர் இளமையிலேயே தமது ஆசிரியர் தொழிலையும் கைவிட்டு நானறிய நாற்பது ஆண்டுகளாக நற்றமிழுக்கு நற்றொண்டு புரிந்து வந்த நல்லறிஞன். அது மட்டுமல்ல. கவிதை உலகில் ஒரு புதிய திருப்பத்தையே உண்டாக்கிவிட்ட அரும்பெருங் கவிஞன். …