சிந்தனைச் செம்மல் கன்னடப்புலவர் தமிழர் வேமண்ணா – கி.சு.இளங்கோவன்
கன்னடப்புலவர் தமிழர் வேமண்ணா 1927இல் தமிழ்நாட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்தாம் கருநாடக மாநிலத்தில் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பிடத் தோற்றுவாயாக வாய்த்த பெரியவர் மானமிகு வேமண்ணா என்கிற வி.சி.வேலாயுதன் அவர்கள். முதலாம் உலகப் பெரும்போர் சமயத்தில் பெங்களூரு பிரிகேடு சாலைக்கு ஓடோடி வந்த இவர் படித்தது என்னவோ ஏழாம் வகுப்பு வரை மட்டுமே. பெங்களூரு பின்னி நூற்பாலைப் பள்ளிக்கூடத்தில்தான் இவரது படிப்பு தொடங்கித் தொடர்ந்தது. ஆயின், தந்தை பெரியார் அவர்களை முதன்முதலில் இவர்…