தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! – கவிக்கோ ஞானச்செல்வன்
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…
தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, திருச்சிராப்பள்ளி
தொடக்கவிழா சித்திரை 06, 2047 / ஏப்பிரல் 19, 2016 மாலை 6.00
கி. பாரதிதாசனின் ‘சொல்லோவியம்’ -மு.இளங்கோவன் அணிந்துரை
கவிஞர் கி. பாரதிதாசனின் சொல்லோவியம் மண்மணம் குழைத்து மரபுப்பாடல் வரைவோர் அருகிவரும் வேளையில் பிரான்சில் வாழும் கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களின் ‘சொல்லோவியம்‘ என்னும் நூலினைச் சுவைக்கும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடமும், உவமைக்கவிஞர் சுரதா அவர்களிடமும் அமைந்துகிடக்கும் சொல்வளமை இந்த நூல்முழுவதும் அமைந்துள்ளமை பாராட்டினுக்கு உரிய ஒன்றாகும். நூறு சொல்லோவியங்கள் இந்த நூலை அழகுசெய்கின்றன. பெண்ணொருத்தியின் உள்ளத்திலிருந்து ஊற்றெடுக்கும் அகவுணர்வு பாட்டுவடிவில் பக்குவமாக வெளிப்பட்டு நிற்கின்றது. தம் உள்ளங் கவர்ந்து உறவாடியவனை நினைத்துப், பேதைப் பெண்ணொருத்தி வெளிப்படுத்தும் அன்புமொழிகளைப்…
பொங்கல் வாழ்த்து – கி.பாரதிதாசன்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள் தங்கத் தமிழ்போல் தழைத்து! பொங்கல் திருநாள் புலரட்டும் பன்னலங்கள் திங்கள் ஒளிபோல் திகழ்ந்து! பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்மலராய் உங்கள் மனமும் ஒளிர்ந்து! பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை எங்கும் இனிமை இசைத்து! பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச் சங்கத் தமிழாய்ச் சமைத்து! பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை! கங்குல் நிலையைக் கழித்து! பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை! எங்கும் பொதுமை இசைத்து! பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்…