நம்பிக்கையுடன் எழு! : கி.பி. அரவிந்தன்
நம்பிக்கையுடன் எழு! மலைகளில் உரமாய்த்தேநீரில் இரத்தமாய்முகமற்றுப் போனோரேகவனித்தீர்களா? பனிப் படலங்களைஊடுருவும்எக்காள ஒலிகள்.சிங்கத்தின் வாள்இனிஉடைபடக்கூடும். அதோ.வயல்வெளி எங்கும்தலை நிமிரும் நெற்பயிர்கள்.வசந்தன் கூத்தின்நாயகர்கள் ஆட்டம்.இவனோ நண்பன். பனைகள் மறைக்கும்செம்மண் பரப்பு.பனங்காட்டுச் சலசலப்பு.ஓலைகள் உராய்வினில்அக்கினிக் குஞ்சுகள். அவற்றுக்கும் அப்பால்அலைகளின் சீற்றம்,முரல்களின் துள்ளல்.அம்பாப் பாடல்களில்சோகம் தொலைக்கும்ஏலேலோப் பாடகர்கள். நண்பர்கள் . . .தோழர்கள். . . “ஆறுகள் முன்னோக்கியேபாய்கின்றன”அப்புறமென்ன!அடர்ந்த மலைகளின்இருட்டினில் இருந்துதேநீர் கரங்களில்விலங்குகள் கழற்று.பனி மலைகளின்உச்சிகள் பிளந்துகலவியைத் தொடங்கு,சக்தியை உமிழ்,உழுத்த மாளிகையின்இடுக்குகள் எங்கணும்ஆலம்விதைகள். நம்பிக்கையுடன்எழு. . . . -கி.பி. அரவிந்தன்