குவிகம் இணைய அளவளாவல்: குரு சீடர் பரம்பரையம்
மார்கழி 11, 2052 ஞாயிறு 26.11.2021 மாலை 6.30 குரு சீடர் பரம்பரையம் பிள்ளை – உவேசா – கிவாச சிறப்புரை: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர், கலைமகள் திங்களிதழ் கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931கடவுச் சொல் / Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09
நூலாசிரியர்களுக்கு இணையான புலமையாளர்கள் உரையாசிரியர்கள் – கி.வா.சகநாதன்
தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் மிகப் பழங்காலத் தொட்டுத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை இயற்றிய ஆசிரியர்களை நூலாசிரியர்கள் என்பார்கள். நூல்களை விளக்கும் ஆசிரியர்கள் இருவகைப்படுவார்கள். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி நூல்களை விளக்கும் ஆசிரியர்களைப் பயிற்று (போதக) ஆசிரியர் என்பர். நூல்களின் உரைகளை இயற்றிப் பலருக்கும் பயன்படும்படி வழங்கியவர்கள் உரையாசிரியர்கள். நூல்களை மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்களுக்கு உரைகள் துணையாக நிற்கின்றன. நூலாசிரியர்களுக்கு எத்துணை மதிப்பு உண்டோ அத்துணை மதிப்பு உரையாசிரியர்களுக்கும் உண்டு. -கி.வா.சகநாதன், உரையாசிரியர்கள் நூலின் சிறப்புரை
மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே – கி.வா.சகநாதன்
மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே! இலக்கண நூல்களுக்கு உரைகள் இல்லாவிடின் அவற்றின் பொருளை அறிவது எளிதன்று. தொல்காப்பியத்தில், இலக்கணத்துக்கு உரை இவ்வாறு அமையவேண்டும் என்ற வரையறை இருக்கிறது. இலக்கணமும் இலக்கியமும் சமய நூல்களும் சூத்திர வடிவில் அமைந்திருப்பதால் அவற்றின் பொருளை அறிந்து கொள்ள உரைகள் இன்றியமையாதவை. இலக்கிய நூல்களின் பொருளையும் மரபறிந்து இலக்கண அமைதி தெரிந்து விளக்க வேண்டும். உரையாசிரியர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நூல்களின் பொருள்களை விளக்குவது மாத்திரம் உரையாசிரியர்களின் இயல்பு என்று எண்ணக் கூடாது. நூல்களின் கருத்தை விளக்கும்போது நூலைக் கற்பார்…