கவிக்கொண்டல் சிறப்பு விழா, சென்னை

ஆடி 14, 2047 / சூலை 29, 2016 உமாபதி கலையரங்கம், அண்ணாசாலை, சென்னை 600 002 கலைமாமணி மா.செங்குட்டுவன் எண்பதாம் அகவையின் தொடக்க விழா அவரின் ‘ஓர் அரிமா  நோக்கு’ நூல் வெளியீடு மீண்டும் கவிக்கொண்டல் இதழின் வெள்ளி விழா நிறைவு இனமானப்  பேராசிரியர் க.அன்பழகன் ஆசிரியர் கி.வீரமணி மதிப்புமிகு சா.கணேசன் பொறி. மு.மீனாட்சிசுந்தரம்

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை

புதிய கல்விக் கொள்கை: தமிழக அரசுக்குக் கருணாநிதி எச்சரிக்கை   புதிய கல்விக் கொள்கை என்ற மத யானையைத் தமிழகத்தில் நுழையவிடக் கூடாது எனத் தமிழக அரசுக்குத் திமுக தலைவர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.   மேலும், புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.    தன்னுடைய அறிக்கையில் இது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:   ”மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எசு.ஆர். சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய…

சிந்தனைச் செம்மல் கன்னடப்புலவர் தமிழர் வேமண்ணா – கி.சு.இளங்கோவன்

கன்னடப்புலவர்  தமிழர் வேமண்ணா   1927இல் தமிழ்நாட்டு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகில் உள்ள விரிஞ்சிபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்தாம் கருநாடக மாநிலத்தில் தந்தை பெரியார் கருத்துகளைப் பரப்பிடத் தோற்றுவாயாக வாய்த்த பெரியவர் மானமிகு வேமண்ணா என்கிற வி.சி.வேலாயுதன் அவர்கள். முதலாம் உலகப் பெரும்போர் சமயத்தில் பெங்களூரு பிரிகேடு சாலைக்கு ஓடோடி வந்த இவர் படித்தது என்னவோ ஏழாம் வகுப்பு வரை மட்டுமே.   பெங்களூரு பின்னி நூற்பாலைப் பள்ளிக்கூடத்தில்தான் இவரது படிப்பு தொடங்கித் தொடர்ந்தது. ஆயின், தந்தை பெரியார் அவர்களை முதன்முதலில் இவர்…

சிவகங்கை இராமச்சந்திரனார் நூல்வெளியீடும் நகைமுகன் படத்திறப்பும், சென்னை

வைகாசி 12, 2047 / மே 25, 2016 மாலை 6.00 பெரியார்திடல், சென்னை 600 007  கொடைக்கானல் காந்தி எழுதிய சிவகங்கை இராமச்சந்தினார்  நூலின் சீர்பதிப்பு வெளியீடு இதழாளர் பொறி.க.நகைமுகன் படத்திறப்பு முன்னிலை  : முனைவர் நாகநாதன் தலைமை :   இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப.நி.) வெளியீட்டுரை: ஆசிரியர்  கி.வீரமணி முதல்நூல் பெறுநர் : நீதிபதி  பொன்.பாசுகர் நூலாசிரியர் உரை :கொடைக்கானல் காந்தி படத்திறப்பு : திரு ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சிறப்புரை :  திரு திருநாவுக்கரசர் ஆய்வுரை: பலர் பொறி.பன்னீர் இராமச்சந்தி்ரன் வழ.இரா.நீதிச்செல்வன்

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்

அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமைகோரித் திராவிடர் கழகம் மறியல் போராட்டம்   சென்னையில்  சித்திரை 05, 2047 / ஏப்பிரல் 18.4.2016  காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துச் சாதியினருக்கும் அருச்சகர் உரிமை கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இரா.அதியமான், கவிஞர் வா.மு.சேதுராமன்  முதலான பலர் கைதாயினர்.

அன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை

மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016  மாலை 6.00 உலகமகளிர் நாள் நிறைவுரை : ஆசிரியர் கி.வீரமணி தலைமை : அ.அருள்மொழி   திராவிடர் கழக மகளிரணி திராவிடர் மகளிர் பாசறை  

வகுப்புரிமை நாள் (14.8.1950) சிந்தனை…. இழிவுக்குரியதல்ல இட ஒதுக்கீடு!

    அகில இந்திய  பா.ச.க. தலைவர் திரு.அமித்சா கலந்துகொண்ட மதுரை மாநாடு  முதன்மை வாய்ந்தது என்ற பீடிகையோடு ‘தி இந்து’ (தமிழ்) ஏட்டில் வெளி வந்துள்ள கட்டுரை (12.8.2015) நயன்மைக்கும்(நியாயத்துக்கும்), சமூகநீதிக்கும் எதிரான  வித்துகளை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. எந்த இட ஒதுக்கீட்டின் பெயரால் சமூகநீதியை நிலைநாட்ட முயல்கிறோமோ அதே இட ஒதுக்கீடு அவர்களைக் காயப்படுத்தவும் செய்கிறது. “சாதி ஒழிப்பைப்பற்றி வாய் கிழியப் பேசும் நம்முடைய அரசமைப்புதான் மறுபுறம்  தொடக்கப் பள்ளிகளிலேயே உன்  சாதி என்ன? என்று பகிரங்கமாகக் கேட்டு வடுவை மேலும் கிளறிக்…

இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை

  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.  முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன.   இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…