வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் – முனைவர் கீதா இரமணன்
வணிகத்துறையில் பயன்பாட்டுத் தமிழ் முனைவர் கீதா இரமணன் ‘‘விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரமாகாது விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் தோன்றாது” என்ற இலக்கியத் தரமிக்க வைரவரிகளைக் கவியரசர் கண்ணதாசன் திரைப்படப்பாடல் வரிகளாய் நமக்களித்தார். இருப்பினும் நம்மில் பலர் விளம்பரங்களால் ஆட்கொள்ளப்பட்டு அனைத்து வணிகப்பிரிவுகளிலும் விளம்பரங்களை நம்பியும்வணிக அடிப்படை மற்றும் வணிகப் பொருள்களின் தரம் போன்ற இன்றியமையாதனவற்றைப் பின்னுக்குத் தள்ளியும் செயல்பட்டு வருகிறோம். ‘எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என்று கூறி ஆண்டுகள் பல கழித்தோம். இதன் அடுத்த நிலையாகத் ‘துறைதோறும் தமிழ்’…