நம் எண்களை நாமறிவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்
உலகளாவிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் 1, 2, 3… என்னும் முறையிலான எண்கள் தமிழில் இருந்து அரபிக்குச் சென்று பரவியதே இருப்பினும், நாம் மூலத்தமிழ் எண் வடிவங்களை அறிதல் வேண்டும். பிறமொழியினர் அவர்கள் மொழியின் எண்களைக் குறிப்பிடவும் பயன்படுத்தவும் அறிந்திருக்கையில் நாம் அறியாதிருப்பது அழகன்று. ஆதலின் தமிழ் எண்கள் தரப்படுகின்றன. பத்து முதலான தமிழ் எண்கள் எழுகையில் இரண்டு நூற்றாண்டுகளாக உலக நடைமுறை பின்பற்றப்படுகிறது. ‘௰’ என்பதே ‘10’ ஆகும். ஆனால் பலர் ‘’10’ என்றே குறிக்கின்றன. ‘௰’ எனக் குறிப்போரும்…