(தோழர் தியாகு எழுதுகிறார் 228 : மணிப்பூர்க் கோப்புகள் – 2 – தொடர்ச்சி) இனிய அன்பர்களே! மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES) – 3 காதை 3 நான் குக்கி இனப் பெண். பெயர் வேண்டா. அகவை 29. மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். இனி அங்கு திரும்பிச் சென்று படிப்பைத் தொடர முடியும் என்ற நம்பிக்கை இல்லை. என்ன நடந்தது? சொல்கிறேன். மே 3 இரவு, விடிந்தால் 4 – இம்பாலில் மணிப்பூர் பல்கலை வளாக…